
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். அதாவது சீமான் பெரியார் பாலியல் இச்சை வரும்போதெல்லாம் தாய், மகள் மற்றும் சகோதரிகளுடன் உடலுறவு கொள்ளுங்கள் என்று கூறியதாக பெரியார் கூறியது பெரும் சர்ச்சையாக மாறியது. அதோடு பெரியாருக்கும் சமூக நீதிக்கும் பெண்ணுரிமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் கூறினார். அதோடு பெரியார் தாலியை அறுத்து எறியுங்கள் என்று கூறியதாகவும் பெண்கள் என்ன குழந்தையை பெற்றெடுக்கும் இயந்திரமா கர்ப்பப்பையை அறுத்து எறியுங்கள் என்று கூறியதாகவும் கூறினார். அதன் பிறகு இன்று சீமான் செய்தியாளர்களை சந்தித்தபோது இது பெரியார் மண் என்று திமுகவினர் கூறுகிறார்களே என்று கேட்டனர்.
அதற்கு இது வேலு நாச்சியார், புலித்தேவன், கட்டபொம்மன், காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மண் என்று வரிசையாக கூறிய அவர் பெரியாரே ஒரு மண்ணுதான் என்றார். அதோடு எங்களுக்கு இது தமிழ் மண் என்றும் கூறினார். பெரியார் பற்றி சீமான் தொடர்ந்து விமர்சித்து வருவதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் விஜய் இதுவரை எந்த ஒரு கருத்தையும் பதிவு செய்யவில்லை. இது தொடர்பாக நிருபர்கள் சீமானிடம் கேள்வி எழுப்பினர். அதற்காக மெயின் ரவுடிகளோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போது எதற்காக அவரை இழுக்கிறீர்கள். மேலும் இப்போது தான் பெரியவர்களுடன் தான் மோதி வருவதாகவும் கூறியுள்ளார்.