நாட்டில் அதிவேக ரயில் சேவையாக வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பாக டெல்லி, சென்னை மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை அமலில் இருக்கிறது. இதனை நாள்தோறும் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்பவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் டெல்லி மெட்ரோ ரயிலிலும் தினசரி ஏராளமான பயணிகள் செல்கிறார்கள். ஆனால் டெல்லி மெட்ரோ ‌ ரயில்களில் அடிக்கடி சர்ச்சையான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இது தொடர்பான செய்திகள் கூட வெளியாகியுள்ளது. அந்த வகையில் தற்போது மெட்ரோ ரயிலில் பயணித்த இருவர் திடீரென ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டனர். அப்போது கோபமடைந்த ஒரு பயணி திடீரென காலில் இருந்த செருப்பை கழட்டி மற்றொரு பயணியை அடித்துவிட்டார். கோபத்தில் அவரும் திரும்ப 2 முறை அடிக்கிறார். இதனை அங்கிருந்தவர்கள் அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் ஒருவர் மட்டும் வந்து அவர்களுக்கிடையே நடந்த தகராறு விலக்கி விட்டார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அதனை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளதோடு பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.