
சென்னை மக்கள் தினந்தோறும் அவர்கள் வேலையின் காரணமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல மெட்ரோ ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு மக்கள் அனைவரும் பயன்படுத்தி வரும் மெட்ரோ ரயிலில் ஃபுட் டெலிவரி ஊழியர் ஒருவர் கஞ்சாவை பயன்படுத்தியுள்ளார்.
இதையடுத்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் அவரது எக்ஸ் என்னும் வலைதளத்தில் ஊழியர் ஒருவர் கஞ்சா பயன்படுத்தியது போன்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் அந்த ஊழியரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் வெளிட்டுள்ள எக்ஸ் பதிவில் பரபரப்பாக இயங்கும் சென்னை நகரத்தில் மக்கள் அதிகம் பயணம் செய்யும் மெட்ரோ ரயில் துணிச்சலாக வாலிபர் ஒருவர் கஞ்சா பயன்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் போதை பொருளின் புழக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கஞ்சா 2.0, 3.0, 4.0 என ஸ்டாலின் வெற்று விளம்பரம் மட்டுமே கொடுத்து வருகிறார். எனவே இனியாவது சட்டம் ஒழுங்கு மீது கவனம் செலுத்துவாரா? என பதிவிட்டுள்ளார்.