நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப காலமாக பாஜகவுக்கு ஆதரவாக பேசி வருகிறார். தொடர்ந்து பெரியாரை இகழ்ந்து பேசி வரும் சீமான் பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். பெரியார் பற்றிய சீமான் தொடர்ந்து சர்ச்சையாக பேசி வரும் நிலையில் அவருக்கு பாஜகவினர் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் ஒரு பிரபல youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் சீமானிடம் ராகுல் காந்தி மற்றும் பிரதமர் மோடி இருவரில் யார் சிறந்த அரசியல்வாதிகள் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் ராகுலை விட பிரதமர் மோடி தான் ஒரு சிறந்த அரசியல்வாதி என்று கூறினார். அதன்பிறகு மோடியைப் போன்று கடுமையாக பயணம் செய்து உழைக்கும் பிரதமரை இதுவரை நான் பார்த்ததில்லை. அவர் மிகச்சிறந்த பேச்சாளர் என்றார்.

அதோடு அரசியல்வாதியாக ராகுல் காந்தியை விட பிரதமர் மோடி தான் மிகச்சிறந்தவர் என்றும் கூறினார். சமீபத்தில் ரஜினிகாந்தை நேரில் சென்று சீமான் சந்தித்தார். அதன்பிறகு சங்கி என்றால் நண்பன் என்று புது விளக்கம் கொடுத்தார். பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஓட்டு போட காசு கொடுக்க வேண்டும் என்றால் அப்படிப்பட்ட வெற்றி வேண்டாம் என்று கூறியதால் அம்மா தமிழிசை தான் உண்மையான தமிழச்சி என்று புகழாரம் சூட்டினார். மேலும் தொடர்ந்து பாஜக தலைவர்களை சீமான் புகழ்ந்து பேசி வருவதால் அடுத்து 2026 தேர்தலில் ஒருவேளை பாஜகவுடன் கூட்டணி அமைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே பாஜகவுக்கு ஆதரவாக பேசுவதால் நாம் தமிழர் கட்சியிலிருந்து பல நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.