தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை, நியாய விலை கடைக்கு நேரில் வருமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என்று உணவு வழங்கல் துறை எச்சரித்துள்ளது.

அதேபோல, நியாய விலை கடைகளுக்கு செல்ல முடியாத முதியவர்கள், அதற்குண்டான அங்கீகார படிவத்தை நிரப்பி, குடும்ப உறுப்பினர்களிடம் வழங்கி பொருள்களை பெற்றுக் கொள்ளலாம். ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம் என உணவுத்துறை தெரிவித்துள்ளது.