
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள உப்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(51). இவரது மனைவி மகாலட்சுமி, மகள் ஸ்ரீஜா. ராஜேந்திரன் பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தில் பயிற்சி சார்பு ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று ராஜேந்திரன் மண்ணுக்குமுண்டான் பகுதியில் விசாரணைக்காக சென்றுள்ளார். அப்போது மாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது தனது வண்டியை ஓரமாக நிறுத்திய ராஜேந்திரன் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
அதனை பார்த்த சக காவலாளி ராஜேந்திரனை தூக்கியபோது அவரது மூக்கிலும் வாயிலும் ரத்தம் வழிந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக காவலாளி ராஜேந்திரனை மீட்டு அருகில் இருக்கும் சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு அவரைப் பரிசோதனை செய்த டாக்டர் ராஜேந்திரன் இறந்து விட்டதாக கூறியுள்ளார். பின்பு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜேந்திரன் இறந்ததற்கான காரணம் என்ன என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.