கர்நாடக மாநில பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச்டி குமாரசாமி இந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் எம்பியாக வெற்றி பெற்ற நிலையில் தற்போது மத்திய மந்திரியாக இருக்கிறார். இவர் நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென மூக்கிலிருந்து ரத்தம் வழிந்தது. இதனால் கைக்குட்டையால் மூக்கிலிருந்து வழிந்த ரத்தத்தை அவர் துடைத்தார்.

உடனடியாக அவருடைய ஆதரவாளர்கள் அவரை பத்திரமாக அழைத்துச் சென்றனர். பின்னர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சிகிச்சைக்கு பிறகு தான் நலமுடன் இருப்பதாக எச்.டி குமாரசாமி தெரிவித்துள்ள நிலையில், தான் சரியாக ஓய்வெடுக்காத போதும், மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது மூக்கிலிருந்து இரத்தம் வழிவது சாதாரணமான விஷயம் என்று கூறியுள்ளார். இருப்பினும் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது அவருடைய மூக்கிலிருந்து திடீரென இரத்தம் அடைந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.