உதகை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மக்கள் நேசன் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவருமான H.M. ராஜு (92) வயது மூப்பு காரணமாக காலமானார். 1989, 1991, 2001 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வான இவர் சட்டமன்ற துணை தலைவராகவும் இருந்துள்ளார். இறுதி சடங்கு இன்று பிற்பகல் அலியூர் கிராமத்தில் நடைபெறுகின்றது. அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.