2007 ஆம் வருடம் முதல் இங்கிலாந்து நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் வெற்றிபெறும் அணிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி பெயரில் பரிசு கோப்பை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த கோப்பைக்கு ஓய்வு கொடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆனது முடிவு செய்துள்ளது.  இந்திய அணியானது வருகிற ஜூன் ஜூலை மாதத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இந்த தொடரில் இருந்து புதிய கோப்பை அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இரண்டு நாடுகளிலும் இருந்தும் சமீபத்திய ஜாம்பவான்களின் பெயர்களை கொண்ட மற்றொரு கோப்பை உருவானால் அது ஆச்சரியமாக இருக்காது.