கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் செல்லப்பிராணியாக ஒரு பூனையை வளர்த்து வருகிறார். இந்த பூனைக்கு அவர் கன்கு என்று பெயர் வைத்துள்ள நிலையில் அதற்கு முன்னங்கால்கள் கிடையாது. இருப்பினும் அது பின்னங்கால்களை வைத்து நடந்து மிகவும் சுறுசுறுப்பாக இருந்தது. அந்த பூனை தன்னுடைய இரண்டு கால்களை பயன்படுத்தி நடந்து செல்வதை அக்கம் பக்கத்தினர் வியப்போடு பார்ப்பதோடு அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களும் ஆச்சரியமாக பார்த்து செல்வார்கள்.

இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி திடீரென பூனை வீட்டில் இருந்து காணாமல் போனது. அந்த பூனையை சதீஷ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தேடிய நிலையில் எங்கும் கிடைக்கவில்லை. இதனால் காவல் நிலையத்தில் சதீஷ் தன்னுடைய பூனையை கண்டுபிடித்து தருமாறு புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த பூனையை அடையாளம் கண்டால் தனக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக சமூக வலைதளத்திலும் அதனுடைய போட்டோவை பகிர்ந்துள்ளார்.