
தமிழகத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான மாத ஓய்வூதியத் தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 1200 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் புதிய ஓய்வூதியம் எப்போது வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகம் பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்கள் மூலமாக ஏழைகளுக்கு தொடர்ந்து நிதி உதவி வழங்கி வருகிறது.
அதன்படி முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட ஓய்வூதியங்கள் ஆயிரம் ரூபாயிலிருந்து 1200 ரூபாயாக உயர்த்தி அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. இந்த புதிய ஓய்வூதிய தொகை வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது. மேலும் கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவைப்படும் ஓய்வூதியதாரர்கள் அதற்கான பரிந்துரைகளை அனுப்பும்படி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.