
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 3-வது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் கேரளாவைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இடது கை சுழற் பந்துவீச்சாளரை அடிப்படை விளையான 30 லட்ச ரூபாய்க்கு மும்பை அணி வாங்கியது. இவர் அறிமுகமான முதல் போட்டியிலேயே 4 ஓவர்களில் 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் வீழ்த்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் எடுத்த 3 விக்கெட்டுகள் என்பது சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ், ஷிவம் துபே, தீபக் ஹூடா ஆகியோரின் விக்கெட்டுகளாகும்.
இதனால் அவர் முதல் போட்டியிலையே மிகுந்த கவனத்தை பெற்ற நிலையில் போட்டிக்கு பிறகு மும்பை அணியின் உரிமையாளர் நீதா அம்பானி டிரெஸ்ஸிங் ரூம் வந்தார். அவர் சிறந்த வீரருக்கான விருதை வழங்குவதற்காக வந்த நிலையில் அவர் விக்னேஷ் பெயரை அழைத்தார். உடனடியாக சகவீரர்கள் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு பாராட்டுகளை தெரிவித்த நிலையில் விக்னேஷ் விருதுகளை பெறுவதற்கு முன்பாக நீதா அம்பானியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
View this post on Instagram