
தேர்தல் பரப்புரையை பொறுத்தவரையில் தமிழ்நாட்டினுடைய பங்களிப்பு பெரிதாக இருக்கும். நீங்கள் பாருங்கள் தேர்தல் பரப்புரையின் கடைசி நாளில் எங்களுடைய இரண்டு பெரிய தலைவர்கள் நமது தமிழ் மண்ணில் இருக்கிறார்கள். மோடி ஐயாவை பொருத்தவரையில் அவருடைய முதல் பரப்புரை தமிழகத்தில் தான். தற்போது கடைசி பரப்புரை தருவாயிலும் எங்கள் கட்சியின் இரண்டு தலைவர்களும் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார்கள். அவர்கள் இருவருக்கும் எங்களது கட்சிக்கும் தமிழகத்தின் மீது மிகப்பெரிய மரியாதை உண்டு.
தேர்தல் கடைசி பரப்புரை நாளில் இருவரும் தமிழகத்தில் இருக்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பரப்புரையில் தமிழகத்தின் பங்கு அதிக அளவில் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அதன் பிறகு மக்கள் கடமையை செய்திருக்கிறார்கள். நாங்களும் எங்களது கடமை செய்திருக்கிறோம். ஜூன் நான்காம் தேதி அதற்கான முடிவு தெரியும். என தெரிவித்துள்ளார்.