தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இதனை தொடர்ந்து எடப்பாடி அருகே சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே முதலாளாக வாக்குச்சாவடிக்கு குடும்பத்துடன் வருகை தந்தார். அங்கு வரிசையில் இன்று அவர் தனது வாக்கை செலுத்தினார். தொடர்ந்து அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.