
அதிமுக கட்சியின் எம்பி தம்பிதுரை தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மருமகன் சபரீசன் ஆகிறது வீடுகளில் ரெய்டு நடப்பது உறுதி என்று கூறியுள்ளார். அதாவது டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளதால் டெல்லியில் முதல்வராக இருக்கும்போது அரவிந்த் கெஜ்ரிவால் சிறைக்கு சென்றது போன்ற முதல்வர் ஸ்டாலின் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோரும் சிறைக்கு செல்வார்கள் என்று கூறியுள்ளார்.
டாஸ்மாக் விவகாரத்தில் முழு பூசணிக்காயையும் சோற்றில் மறைக்க பார்ப்பதாகவும் முதல்வர் ஸ்டாலினை அவர் கடுமையாக சாடியுள்ளார். தற்போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் தம்பி துறை முதல்வர் ஸ்டாலின் வீட்டில் ரெய்டு நடக்கும் என்று கூறியுள்ளார். மேலும் ஆயிரம் கோடி டாஸ்மாக் ஊழலுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற ஏற்கனவே ஸ்டாலினும் சிறைக்கு செல்வார் என்று தம்பிதுரை கூறிய நிலையில் தற்போதும் அதேபோன்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.