
தமிழகத்தில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. அதாவது மும்மொழி கல்வி கொள்கை மற்றும் தொகுதி மறு சீரமைப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேசுவதற்காக முதல்வர் ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மொத்தம் 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் நாம் தமிழர் கட்சி போன்றவைகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காது என்று அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் அதிமுக, தேமுதிக, பாமக, தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்கிறது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொகுதி மறுசீரமைப்பு பற்றி மத்திய அரசு எதையுமே சொல்லாத நிலையில் தேவையில்லாமல் இந்த அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துகிறார்கள் எனவும் இந்த அனைத்து கட்சி கூட்டம் தேவை இல்லாதது என்பதால் இதில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுவரை அனைத்து போராட்டங்களையும் தனியாக சந்தித்ததால் இதையும் நாங்கள் தனியாகவே எதிர்த்து போராடுவோம் என்றும் இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என்றும் அறிவித்துள்ளார்.