ஜூலை 27-ம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக இந்தியா கூட்டணி ஆளும் மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளனர். மத்திய பட்ஜெட்டில் இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் 27-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை பங்கேற்க போவதில்லை என அடுத்தடுத்து பல்வேறு மாநில முதல்வர்கள் அறிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராய் விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் மற்றும் ஹிமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சுகு புறக்கணிப்பை உறுதி செய்துள்ளனர். மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.