
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தஞ்சையில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்ததற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் 2 வருடங்களாக நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறாததால் வேதனையில் தற்கொலை செய்துள்ளான்.
இந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. மாணவ செல்வங்களே. உயிர் என்பது இன்றியமையாதது. எனவே அதனை இழக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் வரக்கூடாது என்றார். அதன் பிறகு திமுகவின் நீட் தேர்வு ரத்து நாடகத்தை நம்பி பல மாணவர்கள் தற்கொலை செய்கிறார்கள். அவர்களின் ரத்தக்கறை முதல்வரின் கையில் தான் இருக்கிறது. மேலும் நீட் தேர்வு ரத்து ரகசியம் குறித்த நாடகம் எப்போது வெளிவரும் என்று கூறியுள்ளார்