அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அறிக்கை கூறியிருப்பதாவது, அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி. அனுமதி இன்றி இரண்டு துப்பாக்கிகள் வைத்திருந்ததாக அரக்கோணம். திமுக கவுன்சிலர் பாபு உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகிறது.

அரக்கோணம் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பின் தான் திமுக அரசின் காவல்துறையால் மிரட்டப்படுவதாக கண்ணீருடன் வீடியோ வெளியிட்டார். திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வ செயல் மாணவியை ஏமாற்றுகிறார். பல திமுகவினர் பாலியல் இச்சைக்கு அந்த மாணவியை இணங்குமாறு துன்புறுத்துகின்றனர்.

இதனை தைரியமாக வந்து புகார் அளித்த மாணவி காவல்துறை மிரட்டுகிறது. திமுக நகராட்சி கவுன்சிலரிடம் முறையாக அனுமதி பெற துப்பாக்கி இருக்கிறது. போதை இளைஞரிடம் கத்தி பள்ளி மாணவர்களின் புத்தகப்பையில் அரிவாளை தாண்டி சர்வ சாதாரணமாக ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள் தமிழகத்தில் புழக்கத்திற்கு வந்துவிட்டது. இதைத்தான் அலங்கோல் ஆட்சி என்கிறேன். இந்த உண்மையை சொன்னால் எதற்கு திரு மு.க ஸ்டாலினுக்கு கோபம் வருகிறது? உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா திரு.மு.க ஸ்டாலின்..?

ஏன் தெய்வசெயலை இப்படி காத்து நிற்கிறது திமுக. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை எங்களது கேள்விகள் ஓயாது. திமுக கவுன்சிலர் கையில் நவீன துப்பாக்கி எப்படி வந்தது என்ற கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறார் முதலமைச்சர் மு க ஸ்டாலின் என கேள்வி எழுப்பி உள்ளார்.