
கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று முன்தினம் ராமநாதபுரம் சாலையில் பாதுகாப்பு வாகனங்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்த பெண் சாலையின் இடது புறத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண் எந்தவிதமான சிக்னலும் செய்யாமல் திடீரென வலது புறத்திற்கு கிராஸ் ஆகிவிட்டார். அப்போது திடீரென பாதுகாப்பு வாகனங்கள் பிரேக் போட்டதால் பின்னால் வந்து கொண்டிருந்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய நிலையில் முதல்வர் இருந்த காரும் மோதியது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பினராயி விஜயன் காயங்கள் எதுவும் இன்றி உயிர்த்தபினார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் முதல்வராக இருந்தாலும் ஸ்கூட்டி ஓட்டும் பெண்களிடம் பாதுகாப்பாக தான் இருக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.