
கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை என திமுக எம்பி கனிமொழி மீது பாஜக குஷ்பூ குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எம்.பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, மருத்துவ மாணவி கொலைக்கு கண்டனம் தெரிவித்து ஏற்கனவே என்னுடைய எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளேன். முதலில் குஷ்பூவை அந்த பதிவை போய் பார்க்க சொல்லுங்கள். அதன் பிறகு பேசட்டும் என்றார். மேலும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக முதல்வரிடம் பேசியுள்ளதாகவும் தெரிவித்தார்.