
18வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவானது இந்தியாவில் பல நகரங்களில் சிறப்பாக நடந்து வருகிறது. இதுவரை ஐந்து லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளது. அதன்படி அனைத்து அணிகளும் தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் விளையாடிவிட்டது. இதன் முடிவில் அதிக ரன் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பி, அதிக விக்கெட் எழுதியவர்களுக்கான ஊதா தொப்பி யாரிடம் உள்ளது என்பதை பார்க்கலாம். அது ஒவ்வொரு போட்டிக்கு மாறிக்கொண்டே செல்லும். அந்த வகையில் இந்த சீசன் ஐபிஎல் தொடர் முதல் ஐந்து போட்டி முடிவில் இஷான் கிஷான் அதிக ரன் குவித்ததால் பேட்ஸ்மனாக முதலிடத்தில் இருக்கிறார்.
இரண்டாவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர், மூன்றாவது இடத்தில் நிக்கோலஸ் பூரன், நான்காவது இடத்தில் சாய் சுதர்சன் ,ஐந்தாவது இடத்தில் மிட்செல் மார்ஸ் உள்ளார்கள். இதேபோல 5 போட்டிகளில் முடிவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியல் சிஎஸ்கே அணியின் நூர் அகமது முதல் இடத்திலும், கலீல் அகமது இரண்டாவது இடத்திலும், க்ருனால் பாண்டியா மூன்றாவது இடத்திலும், சாய் கிஷோர் நான்காவது இடத்திலும், விக்னேஷ் புத்தூர் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். கலில் அகமது, க்ருனால் பாண்டியா, சாய் கிஷோர், விக்னேஷ் புதூர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்கள். இதனால் அவர்கள் போட்டியில் விட்டுக்கொடுத்த ரன்கள் அடிப்படையில் இரண்டு முதல் மூன்று இடங்களில் இருக்கிறார்கள்.