
நொய்டாவில் உள்ள ஸ்விக்கி டெலிவரி டிரைவர் ஒருவர் வாடிக்கையாளரிடம் பிரியாணி பார்சல் வழங்கிவிட்டு இரண்டு முறை தண்ணீர் கேட்டுள்ளார். வாடிக்கையாளரும் குடிக்க தான் தண்ணீர் கேட்கிறார் என நினைத்து வழங்க டெலிவரி செய்பவர் இரண்டு முறையும் அந்த தண்ணீரில் முகத்தைக் கழுவுவதைக் கண்டு வாடிக்கையாளர் விரக்தி அடைந்துள்ளார் . பெண் இது குறித்து வாடிக்கையாளர் சமூக ஊடகங்களில் பதிவிட, டெல்லி NCR இல் வெப்பம் காரணமாக பலரும் அவதிப்பட்டு வருகிறோம்.
இந்த வெயிலில் உங்களுக்காக உணவை எடுத்துக்கொண்டு வந்த அவர் தண்ணீரால் முகம் கழுவி வெப்பத்தை தணித்துக் கொள்ளும்படி தான் தெரிகிறது. இதில் என்ன தவறு இருக்கிறது ? என கேள்வி எழுப்பியுள்ளனர். டெலிவரி செய்பவருக்கு ஆன்லைனில் மக்கள் அனுதாபம் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த ஸ்விக்கி கேர்ஸ் எங்களது ஊழியர் வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காகவே அவ்வாறு செய்ததாகவும், இது ஒரு மனிதாபிமான செயலாக கருதப்படுவதாக பதிலளித்துள்ளது.