மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் இளைஞர்கள் சிலர் வந்துள்ளனர். காரில் இருந்த இளைஞர் ஒருவர் சிறுமியின் முகநூல் நண்பர் என்று கூறப்படுகிறது.
இதனால் அந்த நபர் சிறுமியிடம் காரில் ஏறுமாறு கூறியுள்ளார். அந்த இளைஞரை நம்பி சிறுமியும் காரில் ஏற ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்று முகநூல் நண்பர் மற்றும் மூவர் என கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர் சிறுமியிடம் இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவோம் என்று மிரட்டி விட்டு விட்டனர். இது குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வழக்கு பதிவு செய்த போலீசார் நான்கு பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.