விதிமீறலில் ஈடுபட்ட காரணத்தினால் பேடிஎம் அதன் வங்கி சேவை சார்ந்த செயல்பாடுகளை பிப்.29ஆம் தேதி பிறகு நிறுத்திக்கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது. வாடிக்கையாளர்கள் விவரங்களை முறையாக பராமரிக்காததால் Paytmக்கு ஏற்கெனவே RBI அபராதம் விதித்த நிலையில், தொடர்ந்து அந்நிறுவனம் விதிமீறல்களில் ஈடுபட்டதால், அதன் செயல்பாடுகளை முற்றிலும் முடக்க RBI உத்தரவிட்டது.

அதோடு வாடிக்கையாளர்களிடம் இருந்து wallet, fastag மூலம் பணம் பெறவும் தடை விதித்தது. இந்நிலையில் அதற்கு பதில் அளித்துள்ள பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா, பிப்.29ஆம் தேதி பிறகும் பேடிஎம் சேவை தொடரும் என்று கூறினார். மேலும், ஒவ்வொரு சிக்கலுக்கும் தீர்வு உண்டு என்றும், தேசத்துக்காக சேவை புரிய நாங்கள் கடமைபட்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்