
வெற்றிமாறன் டைரக்டில் சூரி, விஜய்சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உட்பட பலர் நடிப்பில் உருவாகி சென்ற மார்ச் 31-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன படம் “விடுதலை-1”. இந்த படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. எழுத்தாளர் ஜெய மோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.
இத்திரைப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த நிலையில் விடுதலை படத்தின் புது அப்டேட் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இப்படம் இன்று (ஏப்ரல் 28) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதன் ஒடிடி வெர்ஷனில் திரையரங்கில் வெளியாகிய வெர்ஷனில் இடம்பெறாத சில பிரத்யேக காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதை ஓடிடி தளம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்து உ ள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Witness the uncut, unseen, unbelievable extended version of #ViduthalaiPart1 Director’s cut on zee5tamil premiers on 28th April.#VetriMaaran @ilaiyaraaja @VijaySethuOffl @sooriofficial @rsinfotainment @BhavaniSre @GrassRootFilmCo @VelrajR @dirrajivmenon pic.twitter.com/u9F3QHKm3q
— ZEE5 Tamil (@ZEE5Tamil) April 27, 2023