சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீசான ஜெய்லர் திரைப்படத்தில் நடிகர் விநாயகன் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார். கேரளாவின் கொல்லம் பகுதியில் அமைந்துள்ள ஒரு நட்சத்திர விடுதியில் படபிடிப்புக்காக விநாயகன் தங்கி இருந்தார். அவர் குடிபோதையில் அந்த ஹோட்டலில் ரகளை செய்தது மட்டுமில்லாமல் வெளிநாட்டு பயணியை திட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விநாயகனை கைது செய்து மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். இதனை தொடர்ந்து அஞ்சல மூடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போதும் விநாயகன் போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஹைதராபாத் விமான நிலையத்தில் மது போதையில் அதிகாரியுடன் வாக்குவாதம் செய்ததால் விநாயகன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.