
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து குறைந்து கொண்டு வந்த நிலையில் தற்போது நகைப் பிரியர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இரண்டு நாட்களாக தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. அதன்படி ஆபரண தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக இன்று அதிகரித்துள்ளது.
22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து 51 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், கிராமுக்கு 75 ரூபாய் அதிகரித்து 6,425 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதனைப் போலவே ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு 1.50 உயர்ந்து 88 ரூபாய்க்கும், கிலோவுக்கு 1500 ரூபாய் உயர்ந்து 88 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.