தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது தொடர் மழை காரணமாக மகசூல் குறைந்து தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் தக்காளி விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ 30 ரூபாய் முதல் 40 ரூபாய்க்கு விற்பனையாளர் நிலையில் இந்த வாரம் 80 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்திருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் பீன்ஸ் உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.