
கொப்பல் மாவட்டம் கரட்டகி பகுதியில் ரவிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் youtube பிரபலம் ஆவார். இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு பியூசி படிக்கும் ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இரு வீட்டருக்கும் காதல் விவகாரம் தெரிய வந்த நிலையில் அவர்கள் காதலை கைவிடுமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளாததால் இரு வீட்டாரும் சம்மதித்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி திருமண ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இளம் பெண் வீட்டுக்கு ரவிராஜ் சென்றுள்ளார். அப்போது அங்கு யாரும் இல்லாததால் இளம் பெண்ணை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததோடு அதை தன் செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டார்.
இந்த வீடியோவை காட்டி மிரட்டி பலமுறை அவர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால அந்த பெண் கர்ப்பமாகவே கருக்கலைப்பு செய்துள்ளார். அதன் பிறகு அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருமுறை அந்த பெண் தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் அவரை உறவினர்கள் காப்பாற்றியுள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் அவர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் தற்போது கொப்பல் காவல் நிலையம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அந்தப் பெண் தன் காதலனை கைது செய்து தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.