
ஈரோடு மாவட்டத்திலுள்ள குதிரைக்கல்மேடு பகுதியை சேர்ந்தவர்கள் தாண்டவன் – சரஸ்வதி தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இருவரும் கல்லூரியில் படித்து வரும் நிலையில் மின்சார துறையில் ஒயர் மேனாக பணியாற்றி வந்த தாண்டவன் மது போதைக்கு அடிமையானவர். இதனால் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.இது காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை சச்சரவை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல் சரஸ்வதி தோட்ட வேலைக்கு சென்றுவிட 10.30 மணி அளவில் தாண்டவன் திடீரென வீட்டிற்கு வந்து அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தாண்டவன் அவர்களது தாய் பழனியம்மாள் சரஸ்வதி பணி புரியும் இடத்திற்கு சென்று இது தொடர்பாக கூறி இருவரும் வீட்டிற்கு சென்று ஜன்னல் வழியாக பார்த்தபோது அங்கு தாண்டவன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து தாண்டவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.