
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒரு சட்டப்படியான ஆணையமாக தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் தலைவர் பதவிக்கு தகுதி உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி 2024 ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் ஆணையத்திற்கு தலைவர் பதவி காலியிடம் ஏற்பட உள்ளது. இந்த காலி பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 31ஆம் தேதி வரை நாளிதழ்களில் வெளியிடப்படுகின்றது. இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய மற்றும் விண்ணப்பிக்க www.tn.gov.in/department/7 என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.