
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே அப்பநாயக்கன் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிள் அதிவேகமாக வந்து மின் கம்பத்தில் மோதியது. மேலும் மோதிய வேகத்தில் அந்த மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்த தீ விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் உடல் கருகி அலறி துடித்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த வாலிபரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மோதிய வேகத்தில் மின்சாரம் பாய்ந்து வாகனம் தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.