
பிரபல தொழிலதிபரும் மகேந்திரா குழுமத்தின் முன்னாள் தலைவருமான கேசுப் மஹிந்திரா காலமானார். இவருக்கு வயது 99. கடந்த 1947 ஆம் ஆண்டு தனது தந்தை நிறுவிய கார் உற்பத்தி நிறுவனத்தில் இணைந்த இவர் 1963 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை நிறுவனத்தின் தலைவராக பணியாற்றினார். அவர் ஓய்வு பெற்றவுடன் அவரது வாரிசாக மருமகன் ஆனந்த் மஹிந்திரா பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் மஹிந்திரா குழுமத்தின் முன்னாள் தலைவர் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.