
இங்கிலாந்தைச் சேர்ந்த சிவான்- ஆடம் என்ற தம்பதியினர் பவுண்டம் என்ற விலை ஒப்பிட்டு தளத்தை கடந்த 2006 ஆம் ஆண்டு தொடங்கினர். அவர்கள் கூகுளில் விலை ஒப்பீடு மற்றும் ஷாப்பிங் போன்ற முக்கிய சொற்றொடர்களுக்கான தேடல்களை மேற்கொண்ட போது அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் கூகுளில் பவுண்டம் வலைத்தளம் மோசமான வீழ்ச்சி அடைந்துள்ளது.
கூகுளின் தானியங்கி ஸ்பேம் வடிகட்டி விதித்த அபராதத்தால் இவர்களது வலைதள பக்கம் எதிர்பாராத வீழ்ச்சியை சந்தித்தது. மேலும் மிகக் குறைவாகவே அவர்களின் தளத்தை கூகுள் மதிப்பிட்டது. ஆரம்பத்தில் அதை தொழில்நுட்ப கோளாறு என நினைத்தனர். ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆன பிறகும் கூகுள் அபராதத்தை நீக்கவில்லை.
இதனால் பவுண்டம் வலைதளத்தின் வாடிக்கையாளர்கள் குறைய ஆரம்பித்தனர். கடந்த 2010-ஆம் ஆண்டு அந்த தம்பதியினர் ஐரோப்பிய ஆணையத்தை அணுகி உள்ளனர். பல கட்ட விசாரணைகள் நடைபெற்றது. அப்போது கூகுள் தனது சொந்த ஷாப்பிங் சேவையை மட்டும் விளம்பரப்படுத்தியது உறுதியானது.
கடந்த 2017-ஆம் ஆண்டு கூகுள் தனது தந்தை ஆதிக்கத்தை தவறாக உபயோகப்படுத்தியதை சுட்டிக்காட்டி ஆணையம் 2.4 பில்லியன் பவுண்டுகள்(26,172 கோடி ரூபாய்) அபராதம் விதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கூகுள் மேல்முறையீடு செய்தது. ஐரோப்பிய நீதிமன்றம் அதனை நிராகரித்து அபராதத்தை உறுதி செய்தது.