சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் தேர்வு செய்த ஹைதராபாத் அணிக்கு தொடர்ந்து சறுக்கல் தான் காத்திருந்தது. 18.3 ஓவர்களில் வெறும் 113 ரன்களுக்கு  இந்த அணியானது ஆல் அவுட் ஆனது. சிறிய இலக்கை நோக்கி களம் இறங்கிய  கொல்கத்தா அணியானது 10.3 ஓவர்களில் அதிரடியாக ஆட்டத்தை கைப்பற்றியது. இதன்  மூலமாக கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறது.

2012 2014 ஆம் வருடம் கம்பீர் தலைமையிலும் தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலும் கோப்பை வென்றிருக்கிறது. இந்த வெற்றியின் மூலமாக ஸ்ரேயாஸ் ஐயர் பெரிய சாதனை செய்துள்ளார். இரண்டு அணிகளை கேப்டனாக இறுதி போட்டிக்கு அழைத்து வந்த பெருமையோடு கோப்பையை வென்றிருக்கிறார்