பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை இன்று நடிகை கஸ்தூரி கட்சி தலைமை அலுவலகத்திற்கு சென்று நேரில் சந்தித்து நீண்ட நேரமாக பேசினார். அவர் சிறைக்கு சென்று விட்டு வந்த நிலையில் தற்போது அண்ணாமலையை சந்தித்தது பேசும் பொருளாக மாறி உள்ளது. ஏற்கனவே திமுகவை சரமாரியாக விமர்சித்து வரும் கஸ்தூரி திமுகவை அகற்ற  எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் அண்ணாமலையை இன்று சந்தித்து நீண்ட நேரமாக பேசிய நிலையில் அதன் பின்பு வெளியே வந்த அவர் சந்தித்ததற்கான காரணத்தை கூறினார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகை கஸ்தூரி பேசியதாவது, நான் அண்ணாமலைக்கு நன்றி சொல்வதற்காக வந்தேன். அதோடு அரசியல் குறித்து விவாதித்தேன். இன்று முதல் முறையாக நான் கமலாயத்திற்கு வந்துள்ளேன். தெலுங்கு மக்கள் குறித்து பேசிய சர்ச்சையில் சிக்கிய போது எனக்கு அண்ணாமலை லண்டனில் இருந்து கொண்டே பக்கபலமாக இருந்தார். அவர் அங்கிருந்து எனக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று கூறிய நிலையில் அண்ணாமலை சொன்னதில் பாதியை மட்டும் தான் நான் செய்தேன்.

அதற்கு என்னை கைது செய்து சிறையில் அடைத்து விட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு சோதனையான காலகட்டத்தில் எனக்கு பக்க பலமாக இருந்த காரணத்திற்காக அண்ணாமலைக்கு நன்றி சொல்ல வந்தேன். நான் அரசியலில் குறித்து பேசிய நிலையில் இன்னும் பல பேச வேண்டி இருக்கிறது. அதன் பிறகு நீங்கள் நினைத்து தகவல்களை நான் தருகிறேன் என்றார். அதன் பிறகு திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்றால் மற்ற கட்சிகள் இணைந்து ஒருமித்த கூட்டணியாக தேர்தலை சந்திக்க வேண்டும். மேலும் நான் நினைப்பதையே எல்லோரும் நினைக்க வேண்டுமென்று அவசியம் கிடையாது என்றார்.