
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மஹராஜ்பூர் பகுதியில் மணமகனின் கைகள் நடுங்கியதால் மணமகள் திருமணத்தை நிறுத்திய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஏற்கனவே இதுபோன்று ஒரு சம்பவம் நடந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது மகாராஜ்பூர் பகுதியில் ஒரு பெண்ணுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இதற்காக திருமண சடங்குகள் முடிவடைந்த நிலையில் திருமண ஊர்வலம் மணமகளின் வீட்டு வாசலை வந்தது. மாலை நேரத்தில் மேடையில் மணமகன் மற்றும் மணமகள் மாலை மாற்றிக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்ற போது திடீரென மணமகள் வைத்திருந்த மாலை கைத்தவறி மணமகனின் கைகளில் விழுந்தது.
இதனால் அவரது கைகள் நடுங்கிய நிலையில் மணமகள் எதற்காக உங்கள் கைகள் நடுங்குகிறது என்று கேட்டார். அவர் பதில் சொல்ல முடியாமல் இருந்த நிலையில் மணமகனின் குடும்பத்தினர் திருமணம் என்ற பதற்றத்தால் கைகள் நடுங்குகிறது என்று கூறினர். ஆனால் மணமகள் இதனை ஏற்காமல் குடிபோதையின் அறிகுறி அதனால் தான் இப்படி கைகள் நடுங்குகிறது என்று கூறினார்.
இதை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மறுநாள் காலை வரை பஞ்சாயத்து நீடித்தது. உறவினர்கள் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட போதிலும் மணமகள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. மேலும் இதனால் திருமணம் பாதியில் நின்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.