ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஒன்றாகவே மாறிவிட்டது. வங்கி கணக்கு, ரேஷன் கார்டு போன்றவற்றோடு ஆதார் அட்டையை இணைப்பது அவசியமாகி விட்டது. ஆதார் ஆவணமானது லோன் பெறுவது முதல் பல சலுகைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக அரசின் பல்வேறு சலுகைகளை பெற முடிகிறது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் விதமாக பலவேறு நலத்திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டு வருகிறது .

40 சதவீதம் அல்லது அதற்கு அதிகமான இயலாமை உள்ளவர்களுக்கு இந்த திட்டத்தில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. உயர்தர கல்விக்கான உதவித்தொகை ஐஐடி, ஐஏஎஸ், என்ஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் முதுகலை டிப்ளமோ படிப்பதற்காக முழு உதவி தொகையும் வழங்கப்படுகிறது. தீனதயாள் ஊனமுற்றோர் மறுவாழ்வு திட்டத்தின் மூலமாக மனஇறுக்கம்,  பெருமூளை வாதம், மன நலம் குன்றியவர்கள், பல குறைபாடு உள்ளவர்களுக்கு மலிவு விலையிலும் மருத்துவ காப்பீடு கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகளை பெற வேண்டுமென்றால் ஆதார் கட்டாயம் ஆகும்.