
இன்றைய காலகட்டத்தில் ஆதார் கார்டு என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் பல நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு ஃப்ரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. 40 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமான இயலாமை உள்ளவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் ஸ்காலர்ஷிப் வழங்கப்படும்.
உயர்தர கல்விக்கான உதவித்தொகை, ஐஐடி மற்றும் என்ஐடி போன்ற முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களிலும் முதுகலை அல்லது டிப்ளமோ அளவில் படிக்க முழு நிதி உதவி வழங்கப்படும். தீன் தயாள் ஊனமுற்றோர் மறுவாழ்வு திட்டம் மூலம் மன இறுக்கம், பெருமூளை வாதம், மனநலம் குன்றியவர்கள் மற்றும் பல குறைபாடுகள் உள்ளவர்களுக்கு மலிவு விலையில் மருத்துவ காப்பீடும் வழங்கப்படுகின்றது. இது போன்ற திட்டங்களை பயன்படுத்த ஆதார் கார்டு கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.