
சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக இணையத்தில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக புதுவிதமான செயல்களை செய்து வீடியோவாக வெளியிடுகின்றனர். அதன்படி ஒரு பெண் மாம்பழ பிரியாணி என்று கூறி ஒன்றை தயாரித்து வீடியோவை பகிர்ந்து உள்ளார்.
பொதுவாகவே பிரியாணி என்றால் அனைவருடைய மனதிலும் காரமான உணவு என்ற எண்ணம் தான் ஏற்படும். இனிப்பு சுவையில் பிரியாணி என்றால் அனைவரும் முகம் சுளிக்கும் வகையில் தான் அது இருக்கும். இந்த நிலையில் பெண் ஒருவர் கோடை காலம் என்பதால் மாம்பழத்தில் பிரியாணி செய்வதாக கூறி வெளியிட்டு இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க