
சென்னையில் உள்ள கேகே நகர் காமராஜர் சாலை பகுதியில் அஜித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் இருக்கிறார். இவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர் சம்பவ நாளில் கோட்டூர்புரத்தில் உள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து விட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அஜித்தை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிதித்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தன்னுடைய மரணத்திற்கு தன் மனைவி, அவருடைய தங்கை மற்றும் மாமனார் மாமியார் ஆகியோர் தான் காரணம் என்று கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.