
சூரி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் மாமன். இந்தப் படத்தை விலங்கு என்ற இணைய தொடரை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் தான் இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.
மேலும் ராஜ்கிரண், பாபா பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், பாலசரவணன், மாஸ்டர் பிரகீத் சிவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தாய்மாமன் உறவை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படம் குடும்பத்தினர் விரும்பும் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. இதில் சூரியின் தோற்றம் அவரது ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது. இந்த படம் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாக பட குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.