
இபிஎஸ் பொதுச்செயலாளர் என தீர்ப்பில் கூறப்படவில்லை மீண்டும் நீதிமன்றம் நாடுவோம் என ஓபிஎஸ் அணியினர் தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ், வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் சென்னையில் செய்தியாளரை சந்தித்து பேசினர். அதில் “ஒரு எம்ஜிஆர் படத்தில் எம்ஆர் ராதா வெற்றிக் கொண்டாடுவார், ஆனால் ஜெயித்தது எம்ஜிஆர் ஆக இருப்பார். அதேதான் இங்கும். மாப்பிள்ளை அவருதான் ஆனா சட்டை என்னுடையது” என இபிஎஸ் அணியை சாடினர்.