சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் இருந்து பரமக்குடிக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து காலை 8 மணிக்கு வருவதால் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். அதேபோல் தெ.புதுக்கோட்டை, கச்சாத்த நல்லூர், பிரமணக்குறிச்சி போன்ற கிராமங்களில் அதிக பயணிகள் ஏறுவதனால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. அதனால் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சில சமயங்களில் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் பஸ் சென்று விடுகிறது. அதனால் மானாமதுரை – பரமக்குடி வழித்தடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
“மானாமதுரை- பரமக்குடி வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்”.. பொதுமக்கள் கோரிக்கை…!!!!
Related Posts
இணைபிரியா நண்பன் செய்த துரோகம்…. கண்முன்னே கண்ட காரியம்…. கடைசியில் நேர்ந்த கொடூரம்…!!
திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (32) ஓசூரில் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவரது நண்பர் சரவணன் (35). இருவரும் இணைபிரியா நண்பர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில் காளிதாஸின் மனைவி ரேவதிக்கும் சரவணனுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த காளிதாஸ் அவர்களை எச்சரித்துள்ளார். மேலும் சரவணனின்…
Read more“யூடியூபில் வீடியோ”… வங்கியில் திருடுவது எப்படி…? பிளான் போட்ட எம்பிஏ பட்டதாரி…. தட்டித் தூக்கிய போலீஸ்….!!!
மதுரை மாவட்டத்திலுள்ள ஆரியப்பட்டி கிராமத்தில் லெனின் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்பிஏ முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வந்த நிலையில் ஊதியம் போதாததால் வேலையை விட்டு நின்றார். அதன் பிறகு சொந்த ஊருக்கு…
Read more