பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டம் டெட்காமா கிராமத்தில் சூனியம் செய்ததாகக் கூறி, பாபுலால் ஓரான் என்ற நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகிய ஐந்து பேர், கிராம மக்களால் உயிருடன் எரிக்கப்படுகிற்றனர். மூடநம்பிக்கையின் பேரில் நடந்த இந்த பயங்கர சம்பவம், கல்வியறிவு இல்லாத சமுதாயத்தில் மூர்க்கமாக வெளிப்பட்டுள்ளது. பாபுலால் ஓரான், அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் தாயார் ஆகியோர் சம்பவத்தில் பலியாகினர். இந்த கொடூர சம்பவத்திற்கு முன்னதாக, நகுல் ஓரான் என்பவரால் நடத்தப்பட்ட தாந்த்ரீக சடங்கு தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில், நகுல் ஓரான் ஒரு குழந்தையின் உடலை தடவி, மந்திரங்கள் உச்சரித்துக் கொண்டிருப்பது தெளிவாகக் காணப்படுகிறது. குழந்தை இறந்துவிட்டதாக கூறியதையடுத்து, பாபுலால் மீது சூனியம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இதனையடுத்து, நகுல் தன் மது பழி விழுந்து விடக்கூடாது என்பதற்காக கிராமத்தினருடன் சேர்ந்து, பாபுலால் குடும்பத்தினரை தாக்கி, பின்னர் அவர்களை உயிருடன் எரிக்க வழிவகுத்தார் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்த நேரத்தில் பாபுலால் உடன் இருந்த தம்பி குப்லால் ஓரானும் தாக்கப்பட்ட தாக்கப்பட்ட நிலையில் அவர் எப்படியோ தப்பித்து தன் குடும்பத்தினருக்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்து போலீஸ் இடம் கூறினார்.

சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகுல் ஓரானை முதன்மை குற்றவாளியாக அடையாளம் கண்டுள்ளனர். அவரது மீது பல கிராமவாசிகள் முன்னதாகவே ஆட்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதால், பெரும் ஆதரவு இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மூடநம்பிக்கைகள், சூனியம் எனும் கற்பனைகளின் பேரில் உயிரிழந்த இந்த ஐந்து பேரின் மரணம் சமூகத்தில் கேள்விக்குறிகளையும், பயத்தையும் எழுப்பியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாதவாறு அரசு மற்றும் சமூக அமைப்புகள் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.