
ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாதாந்திர ஓய்வூதியத்தை நிர்ணயம் செய்ய EPFO அமைப்பு குறிப்பிட்ட பென்ஷன் ஃபார்முலா ஒன்றை பயன்படுத்தி வருகின்றது. தற்போது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஊழியர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை நிர்ணயம் செய்ய தற்போது அமலில் உள்ள சூத்திரத்தில் சில மாற்றங்களை செய்ய உள்ளதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது ஊழியர் கடந்த 60 மாதங்களில் பெற்ற சராசரி சம்பளத்திற்கான ஓய்வூதியம் தற்போது வரை வழங்கப்பட்டு வரும் நிலையில் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய சேவையின் போது பெற்ற சராசரி ஓய்வூதியத்துடன் இதனை சேர்க்கும் வகையில் சில விதிகள் மாற்றப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விதிகள் மாற்றப்பட்ட பிறகு ஓய்வூதியம், ஓய்வூதிய தொகை மற்றும் அதற்கான இறுதி முடிவுகள் வெளியிடப்படும் என்றும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது