இன்றைய காலகட்டத்தில் மக்கள் சேமிப்புகளில் அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள். வங்கிகளுக்கு ஏற்றவாறு தபால் அலுவலகத்திலும் சேமிப்புகள் திட்டங்கள் அதிகமாக இருக்கிறது. இதில் சரியான திட்டத்தை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யும் போது நமக்கு நல்ல லாபம் கிடைக்கும். அந்த வகையில் போஸ்ட் ஆபீசில் செயல்பட்டு வரும் அருமையான பிக்சட் டெபாசிட் திட்டம் குறித்து பார்க்கலாம் . இதில் குறைந்த முதலீடு செய்தால் போதும். ஒரே நேரத்தில் அனைவரும் முதலீடு செய்ய முடியாது. மொத்தமாக முதலீடு செய்ய முடியாதவர்கள் இந்த திட்டத்தில் இணையலாம். இந்த திட்டத்திற்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

மாதம் தோறும் சின்ன சின்ன தொகையை இந்த திட்டத்தில் முதலீடு செய்து நல்ல லாபத்தை பெறலாம். இந்த திட்டத்திற்கு ஐந்து ஆண்டுகள் முதிர்வு காலம். குறைந்தபட்சமாக 100 ரூபாய் முதலீடு செய்து இந்த திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க முடியும். அதிகபட்ச வரம்பு கிடையாது. ஒருவர் இந்த திட்டத்தில் மாதந்தோறும் 2800 டெபாசிட் செய்து நல்ல லாபத்தை பெறலாம். ஐந்து வருடங்களுக்கு முதல் இந்த தொகையை முதலீடு செய்யும்போது மொத்தமாக 1,68,000 டெபாசிட் செய்யப்பட்டிருக்கும். இதற்காக வழங்கப்படும் 6.7% வட்டி வீதத்தின் படி ஐந்து ஆண்டுகளில் 31,824 வட்டி கிடைக்கும்.