
தமிழ்நாட்டில் +2 தேர்வி எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியது. இதில் மாணவிகள் 94.03% மற்றும் மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே நேரம் 12-ம் வகுப்பு தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி சாதனை படைத்துள்ளார். பானு பிரியா-சரவணக்குமார் தம்பதியின் மகளான அண்ணாமலையார் பள்ளி மாணவி நந்தினி, தேர்வில் அனைத்து பாடங்களிலும் சென்டம் எடுத்து 600க்-கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் மாணவி நந்தினிக்கு தங்கப் பேனாவை கவிஞர் வைரமுத்து பரிசாக அளிக்க உள்ளார். இது குறித்து ட்விட்டரில் அவர், தச்சுத் தொழிலாளியின் மகள் மாநிலத் தேர்வில் உச்சம் தொட்டிருப்பது பெண்குலத்தின் பெருமை. இதனால், அவரை பாராட்டும்விதமாக அண்மையில் தான் பெற்ற தங்கப்பேனாவை, திண்டுக்கல்லுக்கு நேரில் சென்று பரிசாத தருவேன் என குறிப்பிட்டுள்ளார்.