இங்கிலாந்தில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களுடைய விசாவில் இனி தங்களது குடும்பத்தினரை அழைத்துச் செல்ல முடியாது என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. புதிய விசா கட்டுப்பாடுகள் இந்த மாதம் முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர் விசாவை பயன்படுத்தி பலர் இங்கிலாந்தில் வேறு பணிகளுக்காக நுழைவதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.